

தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தில் தை கிருத்திகை விழாவை முன்னிட்டு 10 ஆம் ஆண்டு தெப்பல் விழா (06.02.2025) அன்று முருகப்பெருமாள் கரட்டான் குளத்தில் தெப்போற்சவத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். மறுநாள்(07.02.2025) 108 பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.