பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை (ஜூன் 29) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக ஏற்கெனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகள் தவிர்த்து கூடுதலாக மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு 400 சிறப்புப் பேருந்துகளும், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து 400 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.