மனித வாழ்வில் மிக முக்கியமானவை உண்ண உணவு, உடுத்த உடை, மற்றும் இருப்ப இடம். உண்ண உணவில்லாமலும் மனிதன் வாழ முடியும், ஆனால் உடுத்த உடை இல்லாமல் வாழ முடியாது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பட்டுப் புடவைகள் நெசவு செய்யும் நெசவாளர்களின் வாழ்க்கையில் முக்கியமான திருவிழாவாகும் பொங்கல் திருவிழா.

பொங்கல் திருநாளில் மக்கள் ஜவுளிக் கடைகளுக்கு சென்று புத்தாடைகளையும் பட்டு சேலைகளையும் எக்கச்சக்கமாக வாங்குவார்கள். இதனால் நெசவாளர்கள் இரட்டிப்பு வேலையைச் செய்து தான் அவர்களின் குடும்பத்துடன் பொங்கல் திருவிழாவை கொண்டாட முடியும்.

பகல், இரவு என பாராமல், நெசவாளர்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக உழைத்து, கண் விழித்து பட்டு சேலைகளை உற்பத்தி செய்கிறார்கள். பொங்கல் திருநாள் முடிவடைந்த பத்து நாட்களுக்குப் பின்னர், முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு, அவர்கள் மீண்டும் தங்களது தொழிலை நம்பிக்கையோடு துவங்குவார்கள்.

இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி விநாயகப் பெருமானை வழிபட்டு, அனைத்து நெசவாளர்களும் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்கினர்.

இந்த நன்னாளில், நெசவாளர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற வேண்டும் என எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.