தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று (24.02.2025) நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியர் திரு.சுவாமிகண்ணு தலைமை வசித்தார்.

பள்ளியில் நுழைவாயில் திறப்பு, ஆண்டறிக்கை வாசித்தல் ஆண்டு மலர் வெளிடுதல், மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கவிதை, கட்டுரை, விளையாட்டு போன்ற பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கப்பட்டது.

இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழக (PTA) உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.