திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள நீர்நிலைகளான ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. சேத்துப்பட்டு வட்டம் தேவிகாபுரத்தில் உள்ள பெரிய ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து, இன்று ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீர்நிலைகள் நிரம்பியதால், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு மக்களுக்கு பெருமளவு நன்மை ஏற்படும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.