அண்ணாமலையாருக்கு அரோகரா! திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் (03.12.2025 ) மாலை 06.00 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. “அரோகரா” முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசித்தனர்.

December 3, 2025 18:00 848

Read More

பரணி தீபம் ஏற்றப்பட்டது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த, 24 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03ம் தேதி, பஞ்ச பூதங்கள்,என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

December 3, 2025 06:00 1115

Read More

கார்த்திகை தீப விழா: கொப்பரை எடுத்துச் செல்லும் காட்சி!

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை மகா தீபத்திருவிழா 2025 முன்னிட்டு, அண்ணாமலையார் மகா தீபத்திற்காக பக்தர்கள் பெரிய அளவிலான கொப்பரையும் நெய்யையும் மலையில் ஏற்றும் காட்சி. 

December 2, 2025 15:04 863

Read More

திருக்கார்த்திகை தீபம் 2025 – தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் செல்லும் பகுதிகள்!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும் பௌர்ணமி கிரிவலமும் முன்னிட்டு, 02.12.2025 முதல் 05.12.2025 வரை பக்தர்களின் வசதிக்காக அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரம்.

December 1, 2025 17:23 682

Read More

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – எட்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாளான இன்று (1.12.2025) காலை விநாயகர் மற்றும் சந்திர சேகர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

December 1, 2025 17:16 418

Read More

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் நாள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.பத்தாம் நாளான புதன்கிழமை (03.12.2025) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

December 1, 2025 15:11 374

Read More

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (29.11.2025) இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெற்றது.

December 1, 2025 14:18 371

Read More

மகாதீபம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனம் காண annamalaiyar.hrce.tn.gov.in இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

December 1, 2025 12:31 173

Read More

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் காலை!

தீபத் திருவிழா ஆறாம் நாள், இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா. 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

November 29, 2025 17:39 697

Read More

கார்த்திகை தீபம் 2025: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விரைவில்!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 நிகழ்வுக்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது. முன்பதிவு செய்ய: annamalaiyar.hrce.tn.gov.in டிக்கெட் விவரங்கள் (கடந்த ஆண்டின் தரவு அடிப்படையில்):   -பரணி தீபம் – Rs.500 (500 டிக்கெட்)   -மகா தீபம் – Rs.600 (100 டிக்கெட்)   -மகா தீபம் – Rs.500 (1000 டிக்கெட்) முன்பதிவு 01.12.2025 காலை  10.00 மணிக்கு திறக்கப்படும்.அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

November 29, 2025 10:33 28

Read More