தேவிகாபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில், தை கிருத்திகை விழாவை முன்னிட்டு பக்தர்கள் 108 பால்குடம் எடுத்து பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய பாலமுருகன் கற்றான் குளத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.