திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் "மரபு விதைத்திருவிழா – 2026" நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த விழா 07.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தேவிகாபுரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் மரபு விவசாயம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
- மரபு காய்கறி விதைகள் மற்றும் கிழங்கு வகைகள்
- மரபு நெல் விதைகள்
- மூலிகைச் செடிகள்
- மரபு அரிசி மற்றும் காய்கறிகள்
இயற்கை விவசாய ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்புக்கு:
98433 30194
63829 29131


24


