திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருள்மிகு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜையுடன் மகா தீபாராதனையும், அதன் பின் மாடவீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.