சேத்பட் அடுத்த தேவிகாபுரத்தில் குன்றின் மீது அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் நேற்று (09.08.2023) ஆடி கிருத்திகை திருவிழாவையொட்டி குளிர்பானங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்த திருக்கோளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பாலமுருகன். சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அரோகரா என்ற கோஷத்துடன் சாமியை வழிபட்டனர். மேலும், கோயில் நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.