தீபாவளி தினமானது இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை (12.11.2023) வருவதால், வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் நலன் கருதி கூடுதல் நாள் விடுமுறை கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று தற்போது தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாள் 13.11.2023 திங்களன்று விடுமுறை நாள் என அறிவித்துள்ளது.

நவம்பர் 13ஆம் தேதி விடுமுறை ஈடு செய்யும் வகையில் வருகின்ற 18-ஆம் தேதி பணி நாள் என அறிவித்துள்ளது.