திருவண்ணாமலை தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.

December 14, 2023 17:46 450

Read More

திருவண்ணாமலை மகா தீப மலையில் தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை மகா தீப மலை மீது தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று மலையின் மீது தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்றது.

December 14, 2023 16:55 512

Read More

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகா தீபத்தை தரிசித்தனர். மகா தீபம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று (07.12.2023) மலையில் இருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்.

December 7, 2023 13:59 503

Read More

திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 17 – ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 23-ந் தேதி தேரோட்டம் நடந்தது.இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக கடந்த 26 – ஆம் தேதி மகாதீபம் திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், ஆந்திர, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்.அதைத்தொடர்ந்து 27 – ஆம் தேதி அய்யங்குளத்தில் சந்திர சேகரர் தெப்பல் உற்சவம், 28 – […]

December 1, 2023 15:52 389

Read More

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் முருகர் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (29.11.2023) இரவு தெப்பல் உற்சவத்தில் முருகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

November 30, 2023 11:45 555

Read More

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (28.11.2023) இரவு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

November 29, 2023 12:57 596

Read More

திருக்கார்த்திகை தீபம் நிறைவுற்றதை தொடர்ந்து இன்று பெரிய நாயகர் கிரிவலம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபம் நிறைவுற்றதை தொடர்ந்து இன்று (28.11.2023) காலை அண்ணாமலையார் கோயிலிலிருந்து பெரிய நாயகர் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

November 28, 2023 17:14 533

Read More

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 26 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (27.11.2023 ) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. 

November 28, 2023 14:15 545

Read More

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 27,28,29,30 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகள். திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு அயனா குளத்தில் ஸ்ரீ சந்திரசேகர் தெப்பல் உற்சவம். செவ்வாய் அதிகாலை பெரிய நாயகர் கிரிவலம் இரவு 9 மணிக்கு அயனா குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம். புதன்கிழமை இரவு 9 மணிக்கு அய்யங்குளத்தில் முருகன் தெப்பல் உற்சவம். வியாழன் இரவு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்.

November 27, 2023 16:01 799

Read More

திருவண்ணாமலை மலையில் நேற்று (26.11.2023) மகாதீபம் ஏற்றப்பட்டது!

2023 கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நடை நேற்று (26.11.2023) காலை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 4:00 மணிக்கு சுவாமி சன்னதிக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் சிவாசாரியார்களால் இருபது பரணி தீபங்கள் ஏற்றப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் பரணி தீபம் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. அர்ச்சகர் மூலம் தீபம் ஏற்றப்பட்டதால் ஏராளமானோர் தீபத்தை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருவண்ணாமலை மலையில் 2668 […]

November 27, 2023 14:47 860

Read More