திருவண்ணாமலை மாவட்டத்தில் 27,759 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வில் 13,482 மாணவர்களும், 14,277 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர்.

இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 வரை நடைபெற உள்ளது.

இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழங்கப்படும். இந்த தேர்வை மாணவர்கள் எந்த வித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.