நான்காவது ஆண்டை நிறைவு செய்யும் நமது கலசபாக்கம்.காம் இணையதளதிற்கு தாசில்தார் திருமதி.ராஜ ராஜேஸ்வரி வாழ்த்து அனுப்பியுள்ளார்,அதில் கூறியிருப்பதாவது

“இணையதளம் சேவை துவங்கி நான்காவது ஆண்டை நிறைவு செய்து, ஐந்தாவது ஆண்டில் தங்களது சேவையை  துவங்கியுள்ள கலசபாக்கம்.காம் என்னும் இணையதளம் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கலசபாக்கம்.காம் என்னும் இணையதளம் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதிலும், வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் துவங்குவதல் போன்றவற்றிற்கு ஆலோசனை கூறுதல் போன்ற பணிகளையும் சேவையாக செய்து வருகிறார்கள். வாரந்தோறும் மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளித்து, மாணவர்களின் தனித்திறமை மேம்படவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். மேலும், மாணவர்களுக்கு Digital Marketing பயிற்சி அளித்து வருகிறார்கள். இவ்வாறு கலசபாக்கம்.காம் என்னும் நிறுவனம் மாணவர்களின் திறமை மற்றும் வாழ்வை மேம்படுத்துவதிலும், அவர்களின் பொருளாதாரம் மேம்பாட்டிற்கு வழிகாட்டுதலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், கலசபாக்கம்.காம் என்னும் இணையதளம் மாணவர்களுக்கு பொதுமக்களுக்கும் கலசபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக தெரிவிப்பதுடன், அதில் பயனுள்ள அம்சமாக YouTube Channel மூலமாக கிராமங்களை பற்றிய பல சுவாரசியமான தகவல்களையும் அளித்து வருகிறார்கள்.

உலகம் முழுவதுமாக வாழும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கும் கலசபாக்கம்.காம் இணையதள சேவை வழங்கி அவர்களுக்கும் கலசபாக்கம் நிகழ்வுகளை உடனுக்குடன் அளித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக செயல்படும் கலசபாக்கம்.காம் இணையதளத்திற்கு பாராட்டுகளுடன், மேலும் பல ஆண்டுகள் அதன் சேவையை பொதுமக்களுக்கு வழங்க எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்”.

– திருமதி. ராஜ ராஜேஸ்வரி, தாசில்தார் கலசபாக்கம்

கலசபாக்கம் தாசில்தாரின் வாழ்த்து செய்திக்கு எங்களது நிறுவனர் திரு ஜெ. சம்பத், நன்றி தெரிவித்தார் .