திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரத்தில் பங்குனி உத்திரம் திருவிழா ஒன்பதாம் நாளான நேற்று (03.04.2023) திங்கட்கிழமை இரவு இராவணேஸ்வரர் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.