விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள்:
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரிக்க அனுமதி கிடையாது.
மரங்களில் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம்.
சிலைகளுக்கு வண்ணம் பூசு நச்சு மற்றும் மக்காத ரசாயனசாயம், எண்ணெய், வண்ண பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.
விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் இடங்கள்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோனேரியான் குளம், அய்ந்து கண் வாராதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி மற்றும் கூர் ஏரி ஆகிய ஏழு இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.