தபால்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு தேவையான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர்: Branch Post Master, Assistant Branch Post Master

காலிப்பணியிடங்கள்: 2,994

கல்வித் தகுதி:

குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது – 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

சம்பளம்:

பிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.12,000, அதிகபட்சமாக ரூ.29,380 வரையும் சம்பளம் கிடைக்கும். ஏபிபிஎம் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.24,470 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். இருப்பினும், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.08.2023