விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பேருந்துகளும், போளூரில் இருந்து சென்னைக்கு 20 சிறப்பு பேருந்துகளும் 16 – ஆம் தேதி முதல் 18 – ஆம் தேதி வரை இயக்கப்படும். அதேபோல் திருப்பதி பிரமோற்சவத்திற்கு திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய பகுதியிலிருந்து திருப்பதிக்கு செப்-17 ஆம் தேதி முதல் செப்-30 ஆம் தேதி வரை 12 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.