திருவண்ணாமலை மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் உள்ளூர்,வெளியூர் & வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கிறார்கள். நேற்று (25.07.2023) மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் தலைமையில் பௌர்ணமி சிறப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
திருவண்ணாமலையில் ஆகஸ்ட் மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்:
- ஆகஸ்ட் 1 மற்றும் 2 தேதிகளில் வரும் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதற்காக அதிக அளவில் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்க முடிவு செய்யப்படுகிறது.
- ஆகஸ்ட் ஒன்றாம் தேதி காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும்.
- அன்று முழுவதும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் அனுமதிக்கப்படும்.
- ஏற்கனவே அன்னதானம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தற்பொழுது அனுமதி அளிக்கப்படும்.
- கிரிவலப் பாதை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
- ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்படும்.