
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது
இம்முகாம் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் நடைபெறும். இதில்,
✔️ மின் கட்டண விவகாரங்கள்
✔️ மின் மீட்டர் தொடர்பான கோரிக்கைகள்
✔️ குறைந்த மின்னழுத்தப் பிரச்சினைகள்
✔️ சேதமடைந்த மின் கம்பங்கள் தொடர்பான புகார்கள் உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கலாம்.
மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.