தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் டிச.27,28 மற்றும் ஜன.3,4 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் புகைப்படங்கள் புதுப்பிப்பது போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்களின் வாக்காளர் விவரங்களை சரியாகப் புதுப்பித்து கொள்ளலாம்.


